மேட்டுப்பாளையம் அடுத்த தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் அன்னூர் கே .கோவிந்தசாமி நாயுடு குடும்ப கே.ஜி தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தில் உள்ள கோவிலில் பவித்ரோற்சவ வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை தோமாலை, ஆர்த்தி, அர்ச்சனை, ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது, முக்கிய நிகழ்வாக, வேதமந்திரங்களை ஓதியவாறு ஆச்சாரியார்கள் முன் செல்ல, மங்கல இசை ஒலிக்க ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, – பூதேவி மற்றும் விஸ்வக்சேனருடன் யாகசாலை பிரவேசம் செய்தார்.இதை அடுத்து புண்ணியாகவாஜனம், மேதினி பூஜை, அங்குராப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிறைவாக ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது