தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 20 ஆவது வார்டு பகுதி குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கி அங்கன்வாடி மையத்தை புதுப்பித்து தருமாறு அப்பகுதி மக்களுடன் தேனி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் அப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
இந்த மனுவை உடனடியாக பரிசீலனை செய்த நகர் மன்ற தலைவர் நேரடியாக சென்று அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு மையத்தில் உள்ள பழுது நீக்கி நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி மாநில செயற்குழு உறுப்பினரும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான ஷங்கர் நகராட்சி இணை பொறியாளர் சரவணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்