தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரிமா சங்கம் சார்பாக அன்னை தெரசா 114 வது பிறந்த தினவிழா ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் ஆலங்குளம் அரிமா சங்கத் தலைவர் திருமலை செல்வம் தலைமையில் அன்னை தெரசா படத்திற்கு மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்க செயலாளர் வில்லியம் தாமஸ் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் அரிமா சங்க பொருளாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கோயில்பாண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோலைசேரி மாரிமுத்து, லிவிங்ஸ்டன் விமல், கணேசன்,அரிமா நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.