மதுரை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து (NADCP ) திட்டத்தின் கீழ் 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 20 ம் தேதி அன்று 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமை வகித்து வாகனங்களின் சாவிகளை வழங்கி, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வழித்தடங்களை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ச.நந்தகோபால், மதுரை கோட்ட உதவி இயக்குநர் மரு.பழனிவேலு, திருமங்கலம் கோட்ட உதவி இயக்குநர் மரு.சரவணன் மற்றும் கால்நடை மருத்துவர்கள். உதவியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *