தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்திற்கான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் நிலையங்களான தூத்துக்குடி வடபாகம், மத்தியாகம், தென்பாகம், முத்தையாபுரம், தெர்மல்நகர், தாளமுத்துநகர் மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 7 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறை தீர்க்கும் மனுகூட்டம் மேற்படி ராமலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் முகாமாக நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து மனுதாரர்களின் புகார்கள் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் மூலமாக விசாரணை செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.