தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” மாலை கும்பகோணம் மறைமாவட்ட மேதகு ஆயர் அ.ஜீவானந்தம் கொடியேற்றி துவக்கிவைத்தார்.

      திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி புதுமை மாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் மாதம் 30 தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும். 
         முன்னதாக  பூண்டிமாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இறைபாடல்களுடன் சுமந்து வந்தனர். மாதாவின் திரு உருவம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பக்தர்கள் முன் செல்ல, பேண்டு வாத்தியங்கள் முழங்க, பங்கு தந்தையர்கள் ஊர்வலமாக வந்து பேராலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தை அடைந்தனர்.      
      கும்பகோணம் மறைமாவட்ட மேதகு ஆயர் அ.ஜீவானந்தம் கொடியை புனிதப்படுத்தி மாதாவின் திரு உருவம் பொறித்த கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாதாவின் பக்தர்கள்  "மரியே  வாழ்க, பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே வாழ்க" என்று முழக்கமிட்டனர். வாணவேடிக்கை பின்னர் திருப்பலி மறையுரை ஆற்றி அருளாசி வழங்கினார். இதில் மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ்.இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோனிராஜ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் எஸ்.ஆல்பர்ட்சேவியர், உதவித்தந்தைகள் ஜான்கொர்னேலியுஸ், செபாஸ்டின், ஆன்மீகத்தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோசப்,  சுற்றுவட்ட பங்கு தந்தையர்கள் மற்றும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செய்தனர்.
   நவநாட்கள் 31ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்வேறு மாவட்ட பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி மறையுரை அருளாசி வழங்கின்றனர். செப். 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு அன்னையின் பிறப்புப் பெருவிழா திருப்பலியை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மல்லிகை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பூண்டி புதுமை மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.இராயப்பன் புனிதப்படுத்தி துவக்கி வைக்கிறார். பின்னர் 9ம் தேதி குருமார்கள் திருவிழா கூட்டு திருப்பலியை சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.இராயப்பன் தலைமையில் நிறைவேற்றுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டிமாதா பேராலய அதிபரும், துணை அதிபரும் செய்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *