நாகர்கோவில் பகுதியில் உள்ள கீழவண்ணான்வினை என்ற கிராமத்தில் உள்ள சரக்கல் வினை அருள்மிகு பிரம்ம சக்தி அம்மனும் சுடலை மாடை சுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி கோயிலுக்கு ஆவணி மாத கொடை விழாவிற்க்கு நிலக்கோட்டையில் இருந்து ஏலக்காய், கருப்பு திராட்சை, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகிய உலர் பழங்களை கொண்டு சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் 8 மாலை இரண்டும், 4 மாலை ஒன்றும் என தயார் செய்து 30-ம் தேதி அன்று தொடங்கும் திருவிழாவிற்காக பிரம்மாண்ட மாலையை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ மாலை கட்டும் தொழில் செய்து வரும் முருகன் என்பவர் தயாரித்து அனுப்பி வைத்தார்.