பழனியில் தமிழ் இலக்கிய களம் சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

பழனி சிறுமலர் நடுநிலைப் பள்ளியில். புத்தகங்கள் கையில் எடுத்து படிக்கும் பழக்கத்தை ஊக்கிவிட்ட வேண்டும் என்ற நோக்கத்தை இலக்காக கொண்டு மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறன.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட இலக்கிய களம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்றது.

இதில் பழனி ஒன்றியத்தை சேர்ந்த 25 தொடக்க பள்ளிகளில் இருந்து ஐநூறுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலும் பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி வரவேற்புரையிலும் ஒருங்கிணைப்பாளர் கோகிலவாணி துணை கல்வி அலுவலர் ஆனந்தம் ஆகியோர் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றன.

மேலும் விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு படம் வரைதல், ,கதை சொல்லுதல் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வட்டார கல்வி அலுவலகம் ரமேஷ் குமார். ஆனந்தம் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *