தேனி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கல் தேனி மாவட்டம் விவசாயமே பிரதானமான கொண்ட மாவட்டம் தேனி மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயம் மாவட்ட மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது
இதன்படி தேனி அருகே உள்ள சுக்கு வாடன் பட்டி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இன்று வேளாண் இயந்திரங்கள் குறித்த மாவட்ட அளவிலான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த முகாமில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் இவர்களுக்கு வேளாண் துறையினர் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்புதால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்