புதுச்சேரி அரசு கலை பயன்பாட்டு துறை சார்பாக மறைந்த மூத்த கவிஞர் புதுவைச்சிவம் அவர்களின் நினைவு தினம் அய்யாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள் ஏற்பாட்டில் சிறப்பாக அழைப்பாக சபாநாயகர் ஏம்பலம் R. செல்வம் அவர்களும், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அவர்களும் சமூக நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு பூரணாங்குப்பம் தனசுந்தரம் சாரி டெபுள் சொசைட்டி மூலம் பனை விதை வழங்கப்பட்டு பொது இடத்தில் விதைக்க சொல்லி விழிப்புணர்வு செய்யப்பட்டது,
நிகழ்ச்சியில் புதுவைச்சிவம் இலக்கியப் பேரவை தலைவர் சிவ. இளங்கோ மற்றும் புதுவைச்சிவம் குடும்பத்தாருடன் சொல்லாய்வு செல்வர் திரு. வேல்முருகன் அவர்கள் பங்கு பெற்றனர் , DSC – சொசைட்டி தன்னார்வலர்கள் வண்டி முத்து, கோபிநாத், பிரசாந்த் . நரேந்திரன், ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, ராமலிங்கம், உட்பட பலர் பங்கு பெற்றனர்.