- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
31/08/2024 சனிக்கிழமை இன்று
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கல்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு அறிமுகக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் யமுனா பாலகோட்டி தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு கண்ணதாசன் அவர்கள் வரவேற்றார் மேலும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பற்றிய பல்வேறு கருத்துரைகள் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் ப. பிரகாஷ் கல்வாசல்.