செப்டம்பர் 15 ஓனம் பண்டிகையை முன்னிட்டு கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்துக்கள் கொண்டாடும் வெகு சிறப்பான பண்டிகை ஓணம் பண்டிகை இந்த பண்டிகையை முன்னிட்டு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக எல்லை பகுதியான குமுளியில் தமிழக கேரளா போலீசார் இணைந்து தீவிரமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது ஓணம் பண்டிகையை முன்னிட்டு சட்டத்துக்கு புறம்பாக தமிழக எல்லை மற்றும் வனப்பகுதி வழியாக கேரள மாநிலத்திற்குள் போலி மது எரி சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக வருடம் தோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி வரும்போது இரு மாநில போலீசாரும் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் ஓணம் பண்டிகை செப்டம்பர் 15 வருவதை முன்னிட்டு பீர்மேடு கலால் வட்ட ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் அலுவலக தடுப்பு அலுவலர் ஷிபு ஆண்டனி சிவில் கலால் அலுவலர்கள் அஜேஷ் குமார் ஆகியோருடன் தமிழக காவல்துறை சார்பில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு எஸ்ஐ கோபி ராஜ் போலீசார்கள் கவாஸ்கர் வாஞ்சிநாதன் ஆகிய குழுவினர் இணைந்து தமிழக எல்லையில் உள்ள குமுளி வனப்பகுதியில் ஆய்வு பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்
இந்த ஆய்வில் நமது எல்லை பகுதியான ரோசாப்பூ கண்டம் வட்டக் கண்டம் நால் வழி அணை போர் பை டேம் மற்றும் இதனை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றது
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை குமுளி சோதனை சாவடியில் போலீசார் தீவிரமாக வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.