திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7,889 ரூபாய்க்கும், குறைந்த பட்சவிலையாக ரூபாய் 7,229 ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 7,607 க்கும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் 245.51 குவிண்டால் பருத்தி 18 லட்சத்து 74 ஆயிரத்து 821ரூபாய்க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்துபயன் பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.