போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை திட்ட தூதுவர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டப் பணி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூதுவர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை வகித்தார் நகராட்சி ஆணையாளர் கா ராஜலட்சுமி முன்னிலை வகித்தார் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தூய்மை இந்தியா தூதுவர்கள் 182 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன சான்றிதழ்களை வழங்கினார் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவ மாணவிகள் தங்களின் வீடு பள்ளிகள் மற்றும் அவர்கள் வசிக்கும் தெருக்களை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார் அகமது கபீர் கணேசன் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியின் நிறைவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான எம் சங்கர் நன்றி கூறினார்.