விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திரா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன்(65) ஓய்வு பெற்ற போலீஸ் எஸ் ஐ இவருடைய மனைவி பெயர் செல்வி இவர்களுக்கு கலையரசி(28) சுமலதா26) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கலையரசி கடலூர் பகுதியில் திருமணம் ஆகி தற்பொழுது சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகளான சுபலதா வளவனூர் அருகே உள்ள குருமன் கோட்டை பகுதியில் வசிக்கும் மணிமாறன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் தாரா (6) வயது பெண் பிள்ளை உள்ளது இந்நிலையில் சுபலதாவிற்கு அடிக்கடி நுரையீரல் சம்பந்தமான நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அன்றிலிருந்து தந்தை வீட்டிலேயே மகளுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் மணிமாறன் வளவனூர் பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உணவு அருந்திவிட்டு தன் மகளுடன் தனி அறையில் படுத்து உறங்கி உள்ளார்.
காலை 6:00 மணிக்கு வழக்கம் போல் கோதண்டராமனின் மனைவி செல்வி வாக்கிங் சென்று விட்டார். கோதண்டராமன் தனி அறையில் படுத்து இருந்த தனது இளைய மகளான சுமலதாவை தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சுமலதா இறந்து கிடந்தார் இது குறித்து பொதுமக்கள் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு கோதண்டராமனை கைது செய்தனர். அவருடன் நடத்திய விசாரணையில் மகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால் தங்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.
மேலும் இது குறித்து விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் கொலை செய்ததற்கு வேறு காரணங்கள் ஏதாவது உண்டா என்றும் அவருடைய கணவர் மணிமாறனை வரவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.