C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் 1,027 மாணவர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார்

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் 1,027 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை நேற்று வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,

முத்தமிழரிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையிலும், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியினை அனைவரும் பெற்றிடும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு பல்கலைக்கழகம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் நகரப்பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வியினை பயில வேண்டும் என்பதற்காகவும், மாணாக்கர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒவ்வொரு மாணவரும் தனக்கென ஒரு உயர்கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களையும் வழங்கிடும் வகையிலும், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்களை போக்குவதற்காகவும், நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றலின்றி உயர்கல்வி பயிலும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதியும், அவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புகளை பெற உதவும் வகையில் “உலகம் உங்கள் கையில்“ என்ற திட்டத்தின்கீழ் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 அரசு கல்லூரிகளில் பயிலும் 8,228 மாணவர்களுக்கு ரூ.15.22 கோடி மதிப்பீட்டிலும், 3 அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 823 மாணவர்களுக்கு ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 28 கல்லூரிகளில் பயிலும் 9,051 மாணவர்களுக்கு ரூ.16.75 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்றய தினம் காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 171 மாணக்கர்களுக்கும் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இறுதியாண்டு பயிலும் 856 மாணக்கர்களுக்கும் என மொத்தம் 1,027 மாணவர்களுக்கு ரூ.1,89,99,500 மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 136 தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது.

அரசினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மடிக்கணினிகளை மாணவர்களாகிய நீங்கள் ஆன்லைன் வகுப்புகள், ஆராய்ச்சி, ப்ராஜெக்ட் வேலைகள், குறிப்புகள் எடுப்பதற்கும், எதிர்காலத்தில் வேலைக்கு செல்லும் போது அலுவலகப் பணிகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வேலை, கல்வி, பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, கிராபிக்ஸ் வடிவமைப்பு, கேமிங் போன்ற பல பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, இம்மடிக்கணினிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கென வேலைவாய்ப்பினை பெற்று உங்களது வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைகழக துணைவேந்தர் சு.அறிவுடைநம்பி,பதிவாளர் இரா.சிங்காரவேல், இணைப் பதிவாளர் ஜெகதீஸ்வரன், கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அ.மேரி கிறிஸ்டினா, துணை முதல்வர் மு.கிருபா நந்தினி,துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *