தேனி மாவட்டம் பெரியகுளம் வட கரை பழைய பேருந்து நிலைய வளாகப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா
பெஞ்சமின் நகர் பகுதியைச் சார்ந்த தலித் இளைஞர் எழுமலையை
வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்ததை கண்டித்தும்,
கயவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்
மாபெரும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சுசி.தமிழ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி மண்டல செயலாளர் ஜெ.ரபீக், ஆண்டிபட்டி – பெரியகுளம் தொகுதி மண்டல துணைச் செயலாளர்
ப.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் நகரச் செயலாளர் ஜோதி முருகன் வரவேற்புரையாற்றினார்.
வி.சி.க முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு,தலைமை செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், முன்னாள் மண்டல செயலாளர் இரா. தமிழ்வாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில மண்டல, மாவட்ட தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர்,ஊராட்சி மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு செய்திருந்தனர இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் அ.மது நன்றியுரை யாற்றினார்.