பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கல்லூரித் திறந்தவெளிக் கலையரங்கில் இறைவழிபாட்டுடன் தொடங்கப்பெற்றது.
கல்லூரிச் செயலர் முனைவர் சு. சாந்தா மேரி ஜோஷிற்றா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
இதில் மாணவிகளின் தன்னம்பிக்கை, சுயபாதுகாப்பு, இலக்குகளை முடிவுசெய்தல், உதவும் மனநிலை, சவால்களை சமாளிக்கும் தன்மை என பல கருத்துக்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்கள். மேலும் ஒவ்வொருவரும் நேர்மறை சிந்தையோடு செயல்பட்டால் மாணவிகள் வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் சமுதாயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எடுத்துக் கூறினார்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. சேசுராணி அவர்கள், இல்லத்தலைமை அருட்சகோதரியும் நூலகப் பொறுப்பாளருமான முனைவர் பாத்திமா மேரி சில்வியா அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
மாணவியர் பேரவைச் செயலர் முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி செல்வி மு. கிருத்திகா வரவேற்புரை வழங்கினார். அதன் பின் ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் விதமாக மாணவிகளின் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தினர்.
இறுதியாக மாணவியர் பேரவைத் துணைத்தலைவி செல்வி N.யாழினி நன்றி நவில விழாவானது இனிதே நிறைவுற்றது.