சென்னை எண்ணூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மாணவ மாணவியரகள் சாலை பாதுகாப்பு குறித்து கையில் பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்எண்ணூர் கத்திவாக்கம் மார்க்கெட் பகுதி பஜார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி விதியாக சென்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

இருசக்கர வாகனத்தை பயன்படுத்தபொழுது ஹெல்மெட் அணிந்து பயன்படுத்த வேண்டும் போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது

நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர் பின்னர் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து போலீசார் காலையில் பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராமல் முன்பாகவே வர வேண்டும் பெற்றோர்களை அவசரப்படுத்தாமல் முன்னதாகவே எழுந்து பள்ளிக்கு தயாராகி பெற்றோர்களுடன் மெதுவாக பயணிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது

பெற்றோர்கள் மறந்தாலும் ஹெல்மெட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல ஞாபகப்படுத்த வேண்டும் குறிப்பாக வாகன உரிமம் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும் அறிவுரைகள் வழங்கினர்

மற்றவர்களைப் பார்த்து வாகனங்களை சாலை விதிகளை பின்பற்றாமல் இயக்குவதை கண்டு நாமும் அவ்வாறு பயணிக்க கூடாது பாதுகாப்பு முக்கியம் என்பதனால் சாலை விதிகளை உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினர்

சாலையில் நடந்து செல்லும்போது கண்டிப்பாக இடது பக்கம் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது மது அருந்தக்கூடாது, கட்டாயம்தலைக்கவசம் அணிய வேண்டும் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் நீங்கள் கட்டாயம் செல்லக்கூடாது எனமாணவ, மாணவிகளிடம் அறிவுரை வழங்கினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *