தமிழ்நாடு சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு, அரங்கத்தின் உட்பகுதியை சிறப்பாக வடிவமைத்ததற்கான முதல் பரிசும், அரங்கத்தை பார்வையிட்ட பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ததற்கான முதல் பரிசும் , அரங்கம் அமைத்ததற்கான மூன்றாம் பரிசினையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குநர் ஆபாஷ்குமார் இணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் ஆகியோரிடம் தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.