பரமத்தி வேலூர்
தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.
பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயி சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி பரமத்தி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்.
தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்ளுக்கு நிரந்தரமாக உள்ள தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்று முக்கியத்துவம் கொடுக்கிறது டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இயற்கையான பானம் தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் நோய் பிணியை போக்கக்கூடிய இந்த பானத்திற்கு தடையை இன்னும் நீக்கவில்லை பக்கத்து மாநிலத்தில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ,கர்நாடகா ஆகிய மாநிலத்தில் தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளுக்கு உண்டான தடை இந்த தடையை நீக்க கூறி அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாயிக்காத காரணத்தை முன்னிட்டு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் முதலாக எனது விவசாய நிலத்தில் கள்ளைக் கட்டி முதல் முதலாக சந்தைப்படுத்தினேன் கடந்த ஒன்பதாவது மாதம் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி என் மீது கள் இறக்கிய வழக்கை பதிவு செய்து நீதிமன்றத்தில் காவல்துறை என்னை ஆஜர் படுத்திருக்கின்றது தமிழகத்தை பொறுத்த அளவிற்கு எந்த விவசாயிகள் சங்கத் தலைவர் விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிமைக்காக போராடினால் இந்த திராவிட மாடல் அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்துள்ளது
இந்த திராவிட மடல் அரசை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் வந்தாலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர விட மாட்டோம் என சூலுரை ஏற்று உள்ளோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு உண்டான தடையை நீக்குகிறோம் எனக் எந்த கட்சி கூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும் என தெரிவித்தார்.