தேனி மாவட்டத்தில்
தாட்கோ மூலம் மகளிர் தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களுக்கு நலத்திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் வீதம் 31 பயனாளிகளுக்கு ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும் தாட்கோ சார்பில் தலா ரூபாய் 2.50 லட்சம் மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு 7 .50 லட்சம் மதிப்பீட்டில் 90 சதவீத மானியத்துடன் வீடுகள் பெறும் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா வழங்கினார்
இந்த நிலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் தேனி மாவட்டம் அகமலை ஊராட்சி பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிக ளான என் பாலச்சந்தர் கூறும் போது கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்ததின் பலனாக எங்கள் மனம் குளிர வீட்டு மனை பட்டா வழங்க ஆணையிட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு அவர்கள் கூறினார்கள் இதே போல் அகமலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வீரம்மாள் என்ற பெண்மணி கூறும்போது இந்த பட்டா பெற முடியாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக போராடினோம் ஆனால் தற்பொழுது இந்த பட்டா எங்களுக்கு கிடைச்சிருக்கு எங்களை போன்றவர்களையும் அரவணைத்து இந்த பட்டா வழங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி இந்த வீட்டுமனை பட்டா வழங்கிய தமிழக முதலமைச்சருக்கும் தேனி மாவட்ட கலெக்டருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்
அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் கூறும்போது எங்கள் அகமலை ஊராட்சி கிராமத்தை சேர்ந்தவள் நானும் என் கணவனும் தினமும் விவசாயக் கூலி வேலை செய்தால் தான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும் விவசாயக் கூலி வேலை இல்லை என்றால் பட்டினி கிடக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம் நீண்ட நாட்களாக எங்களுக்கு பட்டா வழங்க வேண்டி கோரிக்கை வைத்தோம் தற்போது முதலமைச்சரின் சீர்மிகு ஆட்சியில் எங்களுக்கு பட்டா கிடைத்தது எங்கள் மனம் குளிர்ந்த மகிழ்ச்சி என்றார் மேலும் பழங்குடியினர் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பட்டா பெற்ற பயனாளிகள் அனைவரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.