பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர், ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ லட்சுமி துர்க்கை, ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆகிய தெய்வங்கள் அருள் பாலித்து வரும் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு மலர் அலங்கார ஊர்வலம் மருத்துவர் தினகரன், திமுக கவுன்சிலர் கவியரசன் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கலந்து கொண்டார். பிறகு பொதுமக்கள் அருள் பெற வாகனத்தில் வீதி உலா வந்தது. இந்நிகழ்வில் கோவில் தக்கர் மற்றும் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.