கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கவிழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபிதலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திட்ட அலுவலர் பெரியசாமி அனைவரையும் வரவேற்றார்
இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி கலந்துகொண்டு மாணவர்களிடையே நாட்டு நலப்பணி குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் முன்னதாக வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் குமரன், துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் சுரேந்தர் ஆகியோர் வாழ்துரை வழங்கினர் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் திரளான மாணவ, மாணவியர் கலந்து கொண்ட நிலையில் முடிவில் திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்