தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் உணவு திருவிழா போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,
தெரிவித்தாவது ;-
தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு உணவுத்திருவிழா போட்டி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெருப்பில்லா சமையல் மூலம் பல்வேறு வகையான ஊட்டச்சத்து உணவு வகைகளை சமைத்து காட்சிப்படுத்தினர். மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்கள் ஊட்டச்சத்து உணவு மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு அரங்கு அமைத்து மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஐசி ஏ ஆர்கே வி கே
அலுவலர்கள் மூலம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் இயற்கை உரங்கள் அடங்கிய தொகுப்பினையும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்கள்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கல்லூரி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முனைவர் பா.இசக்கியம்மாள், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரி முதல்வர் பெ.நாகேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி மதிவதனா குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்
ப.பர்கத்சுல்தானா, மகளிர் பயில்வு மைய உறுப்பினர்கள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், மகளிர் அதிகார மைய பணியாளர்கள் மற்றும் சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.