தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சார்பில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அப்போது தெப்பக்குளத்தின் தென் புறம் வடபுறம் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது இதனால் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தெப்ப திருவிழா நடைபெறும். அதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி நிர்வாகம் தூத்துக்குடி பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் அதிகாரிகளை தெப்பக்குளத்திற்கு வரச் சொல்லி இருந்தது. அதன்படி மேயர் ஜெகன். ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெப்பக்குளத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அதுபோல இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சிவன் கோவில் அறங்காவலர்கள். சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் உள்ளிட்டோ தெப்பக்குளத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது மாநகராட்சி மேயர் ஜெகன் கூறுகையில் மாநகராட்சி சார்பில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை முழுவதுமாக சரி செய்யப்பட்டு தெப்ப திருவிழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது. ஏற்கனவே வல்லுநர்கள் கூறியுள்ளனர்

இனி எந்த பாதிப்பும் கிடையாது என்று அதன் அடிப்படையில் தெப்பத் திருவிழா நடைபெறுவதற்கான பணிகளை மாநகராட்சி 100 சதவீதம் செய்து தர தயாராக இருக்கிறது என்று மேயர் ஜெகன் கூறினார்.

அதற்கு அறநிலை துறை அதிகாரிகள் சிவன் கோவில் அறங்காவலர் குழு ஆகியோர் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடைபெறாது அடுத்தாண்டு நடைபெறும் என்று மேயர் ஜெகன் இடம் கூறினார்கள். மீண்டும் மேயர் ஜெகன் அனைத்து வசதிகளும் அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி செய்து தரும் நீங்கள் தெப்பத் திருவிழாவை நடத்துங்கள் என்றார்

அதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லை அதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று கூறினார் இதனை அடுத்து மேயர் ஜெகன் உடனடியாக பழமை மாறாமல் தெப்பக்குளத்தை சீர் அமைக்கும் பணி உடனடியாக துவங்கியது காலங்காலமாக நடைபெற்று வந்த தெப்பத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவியுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *