தென்காசி மாவட்டம், தென்காசியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கு இடையே தடகளப் போட்டிகள் தென்காசி ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து 29-08-2024 மற்றும் 30-08-2024 ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது.
அதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
இதில் மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் எஸ். மாதவ கிருஷ்ணன் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எ.மைக்கேல் கிளாட்வின் மூன்றாமிடமும், உயரம் தாண்டுதலில் வி.அல்ஸ்டன் மூன்றாமிடமும், 4X 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் எம்.பத்மேஸ், எ.மைக்கேல் கிளாட்வின்,எஸ்.மாதவ கிருஷ்ணன், வி.அல்ஸ்டன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
சீனியர் பிரிவில் எஸ்.செல்வ தர்ஷன் உயரம் தாண்டுதலில் முதலிடமும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், எம். சர்வேஷ் குமார் உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடமும். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடமும், பி.பிரிதிவ் சங்கர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், யு.முகமது யூசுப் பதான் குண்டு எறியும் போட்டியில் மூன்றாமிடமும், பீ.பிரிதிவ் சங்கர், எம். சர்வேஷ் குமார், பி.தம்பி ராஜா மற்றும் எஸ். செல்வ தர்ஷன் ஆகியோர் 4X 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும் மற்றும் 4X 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களை பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் ஆர். ஜே. வி. பெல். செயலாளர் கஸ்தூரி பெல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.