தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் , பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்டம்பர் 10ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெறும்.அதன்படி நேற்று இமானுவேல் சேகரன் 67-வது குருபூஜை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக சார்பில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் திமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. விஜயன், ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம், மற்றும் பல்வேறு திமுக மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய நகரச் செயலாளர்கள் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.