மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் சார்பில் தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் அருகே உள்ள மூலனூர் அடுத்துள்ள தூரம்பாடி கிராமத்தில் ஜே எஸ் டபிள்யூ என்ற தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக காற்றாலை மின்சாரத்தை மற்றும் சோலார் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சாலைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வண்டி பாதை மற்றும் நீர்நிலைகள் வழியாக முறையான அனுமதி இல்லாமலும் விதிமுறைகளை பின்பற்றாமலும் 33 கே வி மின் பாதையை அமைத்து வருகின்றனர். அவ்வாறு மின் பாதை அமைக்கும் பணிகள் 70% அனுமதி பெறாமல் மின்பாதை அமைத்துவிட்டு இப்போது மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துவிட்டார் என்று தனியார் நிறுவனத்தினர் கூறி வந்து வருகின்றனர்.

மின்பாதை அமைக்கும் போது தனியார் நிறுவனத்தினர் அடியார்களை வைத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டி மின் பாதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விதிமுறைகளை பின்பற்றாமல் முறையான கள ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அங்குள்ள விவசாயிகள் தங்களது தேவைகளுக்கு கூட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் விவசாய மின் இணைப்புக்கு கூட கம்பங்கள் அமைக்க முடியாத சூழல் இருந்து வருகிறது

எனவே அப்பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் மின்பாதை அமைக்கும் பணிகளை மாற்று வழியில் மின் கம்பங்களை அமைத்து மின்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் இல்லையென்றால் பொது மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதாக விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *