தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் உடுமலை சாலையில் வேகத்தடை வேண்டும் பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு சாலை விபத்துக்கள் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை நெடுஞ்சாலையில் பல வருடங்களாக தனியார் பள்ளி ஒன்று 500 மேற்பட்ட மாணவ மாணவியருடன் இயங்கி வருகிறது தாராபுரம் டு உடுமலைக்கு செல்லும் சாலையில் நாள் ஒன்றுக்கு 5000 மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர கனரக பேருந்துகள் பத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளின் வாகனங்கள் சென்று வருகிறது அதே சாலையில் திருமண மண்டபம் பொழுதுபோக்கு பேக்கரி தனியார் மதுபான பார்களும் இயங்கி வருகிறது

அங்கே செல்வதற்காக அதிவேகத்தில் வாகன ஓட்டிகள் செல்வதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தினமும் அச்சத்துடன் சென்று வருகிறார்கள் சில விபத்துகளும் அடிக்கடி நடந்து வண்ணம் உள்ளது

பெரிய விபத்தில் நடப்பதற்கு முன் பள்ளிக்கு செல்லும் முகப்பு சாலை முன்பு நெடுஞ்சாலையில் வேகத்தடை ஒன்று அமைக்க தாராபுரம் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சிறுத்தை முருகவேல் தலைமையில் மாநில விவசாய அணி வேலு சிவகுமார் உடன் பள்ளியின் முதல்வர் திருமா ரகு கொடிவளவன் மதன்குமார் கவியரசு சுரேஷ் ஆகியோர் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர் நேரில் சென்று பார்வையிட்டு விரைவில் வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *