செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலி அடுத்த மாத்தூர் எம். எம். டி .ஏ காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாத்தூர், சின்ன மாத்தூர் ,மஞ்சம்பாக்கம் ,சின்னசாமி நகர் உள்ளிட்ட பல நகர்களில் இஸ்லாமியர்கள் சுமார் மூன்றாயிரம் குடும்பத்திற்கு மேலானவர்கள் வசித்து வருகின்றனர் . இங்கு மாத்தூர் மூன்றாவது பிரதான சாலையில் பள்ளிவாசல் உள்ளது.
அப்பகுதியில் இஸ்லாமியர்கள் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பதற்கு அவ்விடத்தில் ஏதும் அடக்கஸ்தலம் இல்லை எனவும் பல வருடங்களாக இதுகுறித்து, அரசுக்கும் ஆட்சியார்களுக்கும்
இஸ்லாமிய சமூக மக்கள் தங்களுக்கு வசதி ஏற்படுத்தித் தர முறையிட்டு அரசு மாற்றம் செய்தது சம்பந்தமாக தற்காலிகமாக 2009 ஆம் ஆண்டு மாற்று இடம் கொடுக்கப்பட்டது அதனை தற்போது ஆகிரமிப்பு என அகற்றிவிட்டனர்.
இதன் காரணமாக இஸ்லாமியர்களின் உடலை பல கிலோமீட்டர் தூரம் உள்ள திருவெற்றியூர் மணலி ஆகிய இடங்களில் உள்ள அடக்கஸ்தலத்திற்க்கு எடுத்துச் சென்று புதைப்பதில் அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே அடக்கம் செய்ய அனுமதிப்பார்கள்.
இதுபோன்று சூழல் உள்ளதால் பகுதி செயலாளர் புழல் நாராயணன் அவர்களிடத்தில் முறையிட்டதில் இஸ்லாமிய இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்
வட்டாட்சியர் இடத்தில் இடம் வழங்குவது சம்பந்தமாக மனு செய்திருந்தனர்.
மனுவை பரிசீலித்த வட்டாட்சியர் ஒரு வாரம் அவகாசம் கொடுத்தால் நான் இது குறித்து மேல் அதிகாரியிடம் தெரியப்படுத்தி இதற்கு என்ன அரசு செய்ய முடியுமோ அதனைப் பெற்றுத் தருவேன் என உறுதி அளித்தார்.