பெரம்பலூரில் விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகளின் ஏற்பாட்டில் ஒன்றிணைந்து ஐந்து இடங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநிலத் துணைத் தலைவர் எஸ். மணிவேல் அவர்களால் சங்க கொடியினை ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
முதலாவதாக மாவட்ட அலுவலகம் அதைத்தொடர்ந்து பெரம்பலூர் நான்கு ரோடு, எறையூர் சர்க்கரை ஆலை, முருக்கன்குடி, மேலமாத்தூர் ஆகிய ஐந்து இடங்களில் தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஏ.கே.செந்தில்குமார், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அமுதா கருணை, மாவட்ட துணை தலைவர் அரசி தமிழரசன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜன், சர்க்கரை ஆலை பொதுச் செயலாளர் டி.எஸ்.எம்.தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் மாவட்ட செயற்கு உறுப்பினர் ஏ.செல்வராஜ், தமிழ்நாடு மின் பகிர்மான சங்கத்தின் தலைவர் செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டனர்.