திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த 52 வயது தையல்காரர் சுப்ரமணியன், நீரிழிவு நோயால் காலில் இரண்டு விரல்கள் அகற்றப்பட்ட நிலையில், ஏற்பட்ட புண் ஆறாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.