இக்கோ டோக்கியோ நிறுவனம் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு அறிவித்துள்ள பட்டியல் முறைகேடு கண்டித்தும்
573 கிராமங்களுக்கு பிரீமியம் செலுத்திய நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே மிகக் குறைவாகவும் இழப்பீடு அறிவித்துள்ளதை கண்டித்தும் முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பிட வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர்
சாமி.நடராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்
முன்னதாக மாவட்ட செயலாளர் எம்.சேகர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்
பி.கந்தசாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும்,
உரத் தட்டுப்பாட்டை உடனே சரி செய்திட வேண்டியும் தனியார் உரக்கடையில் உரம் வாங்கினால் நுண்ணூட்டம் வாங்க கட்டாயப் படுத்துவதை தவிர்க்க
நடவடிக்கை எடுத்திட வேண்டும்
காவிரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் கடலுக்கு அனுப்புவதை தடுத்து, கடைமடை பகுதிகளுக்கு
முழுமையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்,தூர்வாரப்படாத சி.டி. பாசன வாய்க்கால்களை 100 நாள் வேலை திட்டத்தில் தூர்வார நடவடிக்கை எடுத்திடவேண்டும் இக்கோ டோக்கியோ நிறுவனம் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு அறிவித்துள்ள பட்டியல் முறைகேட கண்டித்தும் 573 கிராமங்களுக்கு பிரீமியம் செலுத்திய நிலையில் 72 கிராமங்களுக்கு மட்டுமே மிகக் குறைவாகவும் இழப்பீடு அறிவித்துள்ளதை முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பிட வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சாமிநாதன்
எம்.ஜெயபிரகாஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்