திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
குடவாசல் ஒன்றியம் பெரும்பண்ணையூர் ஊராட்சி ஆற்றங்கரைதெரு மற்றும் பள்ளிகூடத்தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது விநியோக கட்டிடத்தினையும் நாரணமங்கலம் ஊராட்சியில் புதுத்தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும் திருவிடச்சேரி ஊராட்சியில் ஒரு கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தினையும 54.37 லட்சம் மதிப்பீட்டில் திருவிடச்சேரி ஊராட்சி மற்றும் சேதினிபுரம் ஊராட்சியை இணைக்கும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணியினையும், சேதினிபுரம் ஊராட்சியில் 14.60 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
ஆய்வின்போது குடவாசல் வட்டாட்சியர் தேவகி குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர் பங்கேற்றனர்