தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மை பாரத் மற்றும் அரசு கலைக்கல்லூரி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் முதல் மூன்று போட்டிகளில் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் கண்ணன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார் உடன் மை பாரத் முனியப்பன், கல்லூரி பேராசிரியர்கள் சமூக ஆர்வலர் ஞானவேல், கபில்தேவ், குமரன், எழுத்தாளர் சத்யா, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.