ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூர் மணக்குளம், முதல்நாடு, அரிசிகுழுதான், நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டு ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர் மானாவாரி பயிராக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிரிட்டனர்.

இப்பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால், சாகுபடி செய்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு கருகின.இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மிகவும் மன வேதனையுடன் கூறினர்.

மேலும் தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி பயிர் இன்சூரன்ஸ் காப்பீடு செய்த அடங்கல் சான்றை உணவருந்தும் சாப்பாடு தட்டுகளில் வைத்து வயலில் இறங்கி, தங்களுக்கு சோத்துக்கு வழியில்லை முதலமைச்சரையா காப்பாற்றுங்கள் ஐயா வேண்டுகோள் விடுத்து கோஷங்கள் எழுப்பி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *