கும்பகோணம் ஸோகோ நிறுவனம் புதிய ஈஆர்பி மென்பொருள் அறிமுகம்.
ஸோகோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸோகோ ஈ.ஆர்.பி எனும் மென்பொருள் உள்நாட்டிலும் உலக அளவில் வணிகங்கள் வளர்ச்சி அடைய உதவும் என ஸோகோ இணை நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக அளவில் 300 மில்லியன் டாலர் மதிப்பில் நடைபெறும் இ.ஆர்.பி மென்பொருள்
வணிகத்தில் ஸோகோ நிறுவனம் பங்கு பெற்றுள்ளது இந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்கள் அதிகம் சார்ந்து இருக்கக்கூடிய பாரம்பரிய ஈஆர்பி தளங்களுக்கு மாறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன இதன் விளைவாக நடைமுறை படுத்த நீண்ட காலம் மற்றும் அதிக செலவுகள் அதிகரிக்கின்றன.இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக ஸோகோ ஈ.ஆர்.பி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஸோகோ ஈ.ஆர்.பி மூலம் சர்வதேச அளவிலான ஈ.ஆர்.பி தீர்வுகளுக்கு மாற்றாக வலுவான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணக்கமான
ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது.
இந்த உயர்ந்த தொழிலநுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த திறமையாளர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது சொத்து மேலாண்மை,வரவு செலவுத் திட்டம்,தொடர்ச்சியான நிதி கணக்கு முடித்தல் ஆகிய வசதிகளை வழங்குவதுடன், வலுவானநிதி கட்டுப்பாடுகளையும்
தணிக்கை விவரங்களையும் வழங்குகிறது. மேலும் உள்ளூர் நிறுவனங்களுக்கும் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளை கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உருவாக்குவது மட்டுமல்லாமல் திறன் மேம்பாட்டு முன் முயற்சிகளிலும் முதலீடு செய்துள்ளது. கும்பகோணம் சுற்றுபுற பகுதி புதிய வளாகத்தில் 2 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது ஜோஹோ தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிதி மற்றும் செயல்பாடுகள் வணிகப் பிரிவின் உலகளாவிய தலைவர் சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் உடன் இருந்தார்.