கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மனநலம் சுகாதாரமான மாதவிடாய் போதைப்பழக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஆடிட்டோரிய வளாகத்தில் NSS மற்றும் UNION சார்பில் மனநலம் சுகாதாரமான மாதவிடாய் மற்றும் போதைப் பழக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரேணுகா முன்னிலையில் நடைபெற்றது கல்லூரி என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்

தேனி மாவட்டம் Resource person கெளரிமாலா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மனதை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மற்றும் மனநலம் குறித்த ஆலோசனைகளையும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளும் முறைகளையும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார் .

குறிப்பாக இந்த நிகழ்ச்சியால் பெண்களின் முக்கிய பிரச்சினையான மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு அடைந்து பயன் பெற்றோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் கூறினார்கள் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்துத் துறை சார்ந்த மாணவிகளும் பங்கேற்று பயனடைந்தனர்.மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி யூ. ஜெய பிரபா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *