தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு பசுமை இயக்கம் 2-ம் ஆண்டை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு வேம்பு, புங்கன் உள்ளிட்ட 300 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சமூக வனச்சரக அலுவலர் ராஜகோபால், வனவர்கள் மகாராஜன், மாலினி, சிவகாமியம்மாள், கிருஷ்ணா கார்டன் உரிமையாளர்கள் கவுதம், முத்தரசு மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.