தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் பீர் ரகுமான் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கும், பொதுக் கூட்டத்திற்கும், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்திற்கும் வருகை தரும் நாம் தமிழர் கட்சி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வரவேற்பது, 2026 சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் சாந்தகுமார், கண்ணன், பாண்டி, செந்தில், ராஜேஷ், சஞ்சீவி, திருவைகுமார், கோபி பாண்டியன், கார்த்திக், தங்கராசு, மகேஷ் (எ) தமிழ்செல்வன், மகேந்திரன், பேச்சி முத்து வீரத்தமிழர் முன்னணி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.