திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் க. வாசு முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். ஆனந்தன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகளையும், தேவையில்லாத மனக் கவலைகளை மனதில் சேர்க்க வேண்டாம் என்றும், ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்றும் , இன்றைய சூழலில் சிறிய வயதிலேயே ஹார்ட் அட்டாக் வரும் சூழலில் அனைவரும் உடல் நலமும் மன நலமும் பெற்று திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ஆர். சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார். முதுகலை ஆசிரியர் க. பூபாலன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *