விருதுநகர் மாவட்டம்.ராஜபாளையத்தில்
*ஹெல்த் & ட்ரீட்மெண்ட்ஸ் இந்தியா
இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்
சித்ரா பல்நோக்கு & இருதய பரிசோதனை மருத்துவமணை,
இராஜபாளையம் டவுன் லயன்ஸ்
பி .எஸ. கே ஞாபகார்த்த திருமண மண்டப கமிட்டி இணைந்து உலக இருதய நாள் மற்றும் ஒரு நாள் இருதய வால்வ் டிஜிட்டல் பரிசோதனை முகாம்
நடைபெற்றது.
உலக இருதய நாள் விழாவில் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் தலைவர் பெத்து ராஜ் தலைமை தாங்கினார்…
மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஹெல்த் & ட்ரீட்மெண்ட் இந்தியா நிறுவண மருத்துவக்குழு நிபுணர் சொனாலி ஒரு நிமிட இருதய வால்வ் டிஜிட்டல் பரிசோதனை முகாம் முக்கியத்தினை பற்றி பேசினார்.
பி.எஸ்.கே திருமண மண்டப கமிட்டி தலைவர் ராம்சிங். வாழ்த்துரை வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.
இராஜபாளையம் டவுன் லயன்ஸ் சங்க தலைவர் சுந்தர வள்ளி கணேசன் விழாவில் பங்கு கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
14 பேர் கொண்ட ஹெல்த் & ட்ரீட்மெண்ட் இந்தியா நிறுவன சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கு கொண்டு பொது மக்களுக்கு இருதய பரிசோதனை செய்தனர்..
55 வயது மேற்பட்ட மூத்தோர்கள் இராஜபாளையத்தில் 600 பேர் இம்முகாமில் பங்கு கொண்டு பயன் பெற்றார்கள்.
ஹெல்த் & ட்ரீட்மெண்ட்ஸ் இந்தியா நிறுவனம், ஒரே நாளில் 7 மணி நேரத்தில் இருதய _வால்வ் டிஜிட்டல் பரிசோதனை ,உலக சாதனையாக இரண்டு இடங்களில் (அகமதாபாத் மற்றும் இராஜபாளையம்) சேர்த்து 1000 பேருக்குமேல் பரிசோதனை செய்தது உலக சாதனையாக சாதித்து உள்ளார்கள்.
இவ்விழாவில் , மூத்தோர் நலச்சங்கம் இணைச் செயலாளர் அக்ரி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.