திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு துணை முதல்வராக பொறுப்பேற்றதை முன்னிட்டு,வலங்கைமான் பேரூர் கழக அலுவலகம், கடைத்தெரு ராமர் கோவில் பஸ் ஸ்டாப் பகுதி,வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் பகுதி ஆகிய இடங்களில் வலங்கைமான் திமுக பேரூர் கழகத்தினர், இளைஞர் அணியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூர் கழகச் செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ் மாறன்,பேரூர் கழகப் பொருளாளர் புருஷோத்தமன்,ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குத் தெரு எஸ்.ஆர். ராஜேஷ், கௌதம ராஜன்,வார்டு நிர்வாகிகள் தங்க. சிவராஜ், கோ.சண்முக சுந்தரம் யாதவ், கணேசன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பா. வசந்தி பாஸ்கர், லாயம் செல்வமணி, ரம்ஜான் பீவி சிவராஜ், இளைஞர் அணி நிர்வாகிகள் கதிர்,மது சோழன், கணேஷ் சிவனேசன், நிரஞ்சன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.