பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க வேளாண்மை அலகின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊர வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகின் கீழ் நான்கு வட்டாரங்களிலும் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக 2019 ஆண்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் வட்டார இயக்க மேலாளருக்கு மாத தொகுப்பு ஊதியம் ரூபாய் 15450 -ம் வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு தொகுப்பு ஊதியம் 12360 மட்டுமே வருவதாகவும் . தற்போது 27 பணியாளர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் 20 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறோம் மீதமுள்ள ஏழு காலிப்பணியிடை பணியாளர்களின் பணிகளை நாங்களே மேற்கொண்டு வருகிறோம்.
எங்களுக்கு பணிசுமை அதிகமாக உள்ளது மேலும் வாழ்வாரத்திற்கு மேற்கண்ட பணியாளருக்கு தற்சமயம் வழங்கப்படும் தொகுப்பூதியம் போதுமானது இல்லை என்றும் குடும்ப நடத்துவதற்கு சிரமமாக உள்ளது என்றும். ஆகவே அம்மா அவர்கள் எங்களது வாழ்வாதாரத்தை தேவையான கீழ்கண்ட கோரிகளே எங்களுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியுள்ளனர்.