நாமக்கல்
மாவட்டம் பரமத்திவேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் பேரூராட்சி மாமன்றம் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த தலைவர் லட்சுமி முரளி உட்பட 15 வார்டு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன அதில் தமிழக அரசு பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு குடிநீர் திட்டத்தை விரிவு படுத்தும் பணிகளுக்காக17 கோடியே 87 லட்சத்தில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் சரியான விளக்கம் இல்லை என 10 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ஒரு வார்டுக்கும் தலா 10 லட்ச ரூபாயில் வைக்கப்பட்டிருந்த வேலைகளை செய்யாமல் ஒரு சில வார்டுகள் மட்டும் பணி செய்து வந்ததை எதிர்த்தும் முறையான முறையில் ஒப்பந்ததாரர் ஒப்படைக்கப்பட்ட இந்த பணிகளை முடிக்காமல் காலதாமதம் செய்வதாலும் செலவினங்களுக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது

என்பதை குறித்த விளக்கம் இல்லாததால் இன்று கூடிய கூட்டத்தில் 9 திமுக உறுப்பினர்களும் மற்றும் 1 பாமக உறுப்பினர் உட்பட எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர் இதனை அடுத்து மீண்டும் செயல் அலுவலர் அனுமதியுடன் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதால் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி உள்ளிட்ட நான்கு கவுன்சிலர்கள் மற்றும் செயல் அலுவலர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டு கூட்டத்தை நடத்தாமல் மாமன்ற அரங்கைத்தை விட்டு வெளியேறினர்

இதனால் கூட்டம் நடைபெறாமல் இருந்ததை எதிர்த்து 9 திமுக உறுப்பினர்கள் 1 பாமக உறுப்பினர் உட்பட 10 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் சிறப்பு என்னவென்றால் காலையில் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக 2வார்டு திமுக கவுன்சிலர் தமிழழகன் உள்ளிருப்பு போராட்டம் செய்வதற்கு இருசக்கர வாகனத்தில் மெத்தை தலையணை முன்னெச்சரிக்கையாக கொண்டு வந்து மாமன்ற கூட்டம் மேஜையின் மீது மெத்தையை போட்டு படுத்துக்கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் படுத்து கொண்டு வருகிறார்.

மேலும் இது தொடர்பாக பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி கூறுகையில் ஒப்பந்தத்தை எங்களுக்கு வேண்டுமென்று கேட்கிறார்கள் நாங்கள் மக்கள் நலனுக்காக திட்டங்களை தீட்டி வருகிறோம் ஆகையினால் இவர்கள் கமிஷன் பெறுவதற்காக ஒப்பந்தத்தை நாங்கள் சொல்கின்ற ஒப்பந்ததாரிடம் தரவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த விடுவதில்லை என்றும் குறுக்கீடு செய்வதாக கூறினார் இதனால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது பாதுகாப்பு கருதி போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *