திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போஷான் மா விழிப்புணர்வு கண்காட்சி.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் போஷான் மா விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தி சாருஸ்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் போஷான் மா அதாவது ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் வளரிளம் பெண்கள் மற்றும் 6 வயதுடைய குழந்தைகளிடையே காணப்படும் இரத்தசோகையை குறைத்தல் தீவிர மற்றும் மீதமான ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைத்தல் மற்றும் அவர்களிடையே ஊட்டச்சத்தினை மேம்படுத்துதல் தொடர்பாக அங்கன்வாடி பணியாளர்கள் பங்குபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியானது மாவட்ட ஆட்சியரக அலுவலக தரைதளத்தில் காட்சிபடுத்தப்பட்டது
ஊட்டச்சத்து உணவுகள் சிறப்பாக சமைத்து காட்சிப்படுத்திய வட்டாரங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கல்லூரி மாணவர்களுக்கிடையே 0-6 வயது குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவுக்கட்டுப்பாடு குறித்து நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.