க.தினேஷ் குமார்
செய்தியாளர்
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புறக்கணித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புறக்கணித்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது
அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் சற்குண குமார் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாவட்ட பொருளாளர் திலீப் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் தலைவர் மகேஷ் செயலாளர் சர்தார் பொருளாளர் சுந்தரேசன் மற்றும் 100 மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.