திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.09.2024 மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் கல்விக்கடன் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 295 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் ஏற்கனவே 3 நபர்களுக்கு மின்னணு மூலமாக ஒரு நபர்களுக்கு50,000 இரு நபர்களுக்கு 25,000 வீதம் (25000 ஒ 2ஸ்ரீ 50000) 50,000ம் ஆக மொத்த மதிப்பு 1,00,000- ம் தொகை வழங்கப்பட்டது. தங்கநாணயம் 8 கிராம் மதிப்பு ரூ56,640 வீதம் ரூ1.69.920- மதிப்பீட்டில் 3 நபர்களுக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2 பயனாளிக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி விற்பனை வண்டியினையும், உலக சுற்றுலா தின விழா 2024 சுற்றுலாத்துறை சார்பாக திரு.வி.க.கல்லூரியில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் 27.09.2024 அன்று நடைபெற்றது கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற 20 கலைஞர்களில் இன்றைய தினம் 4 கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கேடயத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் நீதிமாணிக்கம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்