சி கே ராஜன் 9488471235
கடலூர் மாவட்ட செய்தியாளர்..
கடலூரில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இம்மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000/-தொகையும், 2ம் பரிசாக ரூ.2000/- தொகையும், 3ம் பரிசாக ரூ.1000/- தொகையும், பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் இன்று வழங்கப்பட்டது.